Friday 19 December 2014

உருளைக்கிழங்கு விலை சரிவு விவசாயிகள் வாட்டம்

மே.பாளையம், : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய உருளைக்கிழங்கு சந்தை இயங்கி வருகிறது. நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் விளையும் உருளைக்கிழங்குகளை விவசாயிகள் மேட்டுப்பாளையம் கொண்டு வந்து விற்பது வழக்கம். 
இங்குள்ள ஏல மண்டிகளில் உருளைக்கிழங்குகள் தரம் பிரித்து ஏலம் விடப்படுகிறது. இதை வாங்கும் வியாபாரிகள் தமிழகம், கேரளா உள்ளிட்ட இடங்களுக்கும், இலங்கை, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். 
இதில் நீலகிரி மற்றும் வடமாநிலங்களில் இருந்து சுமார் 100 லாரிகளில் ஆயிரம் டன் உருளைக்கிழங்கு மேட்டுப்பாளையம் சந்தைக்கு வந்தது. ஏலம் துவங்கியது முதல் 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை கிழங்கு ரூ.800 முதல் ரூ.1000 வரையே ஏலம் போனது. இது கடந்த வாரத்தை விட ரூ.600 குறைவாகும். கடந்த அக்டோபர் மாதம் சீசன் துவங்கிய போது, ரூ.2500க்கு ஏலம் போன உருளைக் கிழங்கு தற்போது ரூ.1500க்கு விலை குறைந்து  ஏலம் போனதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற் போது உருளைக்கிழங்கு விலை குறைத்துள்ளதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயி ரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க விவசாயிகளுக்கு உருளை கிழங்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவற்றை மாநில அரசு மானிய விலையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Source: 

No comments:

Post a Comment