Friday 19 December 2014

தை மாதம் புதிய வரத்துக்காக... காத்திருப்பு! 40 சதவீத அரிசி விற்பனை சரிவு

பதிவு செய்த நாள்

20டிச
2014 
02:50


ஈரோடு:தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும், அரிசி வரத்து அதிகரித்துள்ளதால், அரிசி விலை சரிந்துள்ள நிலையில், விற்பனையும், 30 முதல் 40, சதவீதம் வரை சரிந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
"டிசம்பர் சோனா' எனப்படும் கர்நாடகா பொன்னி, தமிழகத்தில் விளைவிக்கப்படும் வெள்ளை பொன்னி, ஐ.ஆர்., 20, பி.பி.டி., ஏ.டி.பி., 35,1009 இட்லி அரிசி என, அனைத்து ரகங்களும், பழைய அரிசி கிலோவுக்கு, இரண்டு ரூபாய், புது அரிசி ஒரு ரூபாய் வரையும் சரிவடைந்துள்ளது. தடையில்லா வர்த்ததகத்தின் மூலம் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அதிகளவில், அரிசி மூட்டைகள் வரத்தாகின்றன.இதுகுறித்து, மொத்த அரிசி வியாபாரிகள் கூறியதாவது:
ஆந்திராவின் ரெட்கில்ஸ், நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, சென்னைக்கு அதிகளவில் அரிசி மூட்டைகள், லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.
தினமும், 100க்கும் மேற்பட்ட லாரிகளில் அரிசி மூட்டைகள் வருகின்றன. ஆந்திரா அரிசியை காட்டிலும், கர்நாடகா அரிசி தரமானதாகவும், ருசியாகவும் இருக்கும் என்பதால், அந்த ரகத்துக்கு வரவேற்பு அதிகம்.வடகிழக்கு பருவமழையால், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நெல் சாகுபடி அதிகளவில் குவிந்திருப்பதால், வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வியாபாரிகள் தங்களிடம் இருந்த இருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்ததால், வெளிச்சந்தையில், அரிசி விலை குறைந்துள்ளது.தை மாதத்தில் புதிய வரத்து இருக்கும் என்பதால், ஆண்டுக்கு ஒரு முறை மொத்தமாக அரிசியை வாங்கி, பயன்படுத்தும் நுகர்வோர்கள், புதிய வரத்துக்காக காத்திருப்பதால், அரிசி விற்பனையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 30 முதல், 40 சதவீதம் வரை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது, என்றார்.இதுகுறித்து, காங்கேயம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் ஆலைகளில், நெல் அரவை செய்யப்படுகிறது.இருப்பினும், காங்கேயம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக, 120க்கும் மேற்பட்ட ஆலைகள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளன.கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் நெல்லை, அரிசியாக அரைத்து கொண்டு வந்து, இங்கு விற்பனை செய்வதால், வர்த்தகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.விளைச்சல் அதிகரித்த போதும், அரசு சார்பில், நெல்லுக்கு கிலோ, 14.20, 14.70 ரூபாய் மட்டும் வழங்குகிறது. ஈரப்பதம், 18 சதவீதத்தில் இருக்கும் நெல்லை, பத்து முதல், 12 சதவீதத்துக்குள் கொண்டு வந்து, வேகவைத்தால், மூட்டைக்கு எட்டு முதல் ஆறு கிலோ வரை அரிசி குறைவாகவே கிடைக்கும்.போக்குவரத்து, ஆள் கூலி அனைத்தும் சேர்த்தால், விலையில் பெரிய வித்தியாசம் ஏற்படுவதில்லை.இதனால், அரிசி விலையில் பெரிய அளவில் விலை இறங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதில்லை, என்றார்.

Source: 

No comments:

Post a Comment