Tuesday 23 December 2014

ஊட்டியில் களை கட்டுமா தேயிலை சுற்றுலா விழா? "சுதி' இழந்த தேயிலை தொழில்சார் அமைப்புகள்

பதிவு செய்த நாள்

24டிச
2014 
02:15
ஊட்டி : ஊட்டியில், நாளை துவங்கவுள்ள தேயிலை சுற்றுலா வார விழாவுக்கு, தேயிலை தொழில் சார்ந்த அமைப்புகளின் ஆதரவு, எதிர்பார்த்த அளவு இல்லாததால், விழா களை கட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம், அரையாண்டு தேர்வு விடுமுறையில், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு, ஊட்டியில், தேயிலை சுற்றுலா வார விழா கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில், நீலகிரியின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் தேயிலை தொழில், அது சார்ந்த சுற்றுலா வளர்ச்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில், நீலகிரி தேயிலையின் முக்கியத்துவம், அவற்றால் கிடைக்கும் மருத்துவ குணங்கள் குறித்து விளக்கப்படும். தவிர, சுற்றுலா துறை மற்றும் கலைப்பண்பாட்டு துறை சார்பில், நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்தாண்டுக்கான விழா, வரும், 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை, ஊட்டி எச்.ஏ.டி.பி., திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட உள்ளது; பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக, இந்த விழாவில், அரசு நிறுவனமான டான் டீ, பெரிய கம்பெனி தேயிலை தொழிற்சாலைகள், சிறு தேயிலை தொழிற்சாலை நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பை வழங்குவர்; காட்சி அரங்குகள் அமைத்து தங்களின் தயாரிப்புகளை காட்சி மற்றும் விற்பனைக்கு வைப்பர்.இந்நிலையில், நீலகிரி தேயிலையின் விலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் விலை வீழ்ச்சியால், விவசாயிகள் மற்றும் தேயிலை தொழில் சார்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; எனவே, அதை காரணங்காட்டி, "இம்முறை நடக்கும் தேயிலை சுற்றுலா வார விழாவில், சுற்றுலா துறை மற்றும் தேயிலை தொழில் சார்ந்தோரின் ஆதரவு அமோகமாக இருக்காது' எனக் கூறப்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் நடத்தப்படும், இந்த அரசு விழா, நீலகிரி வாழ் சிறு விவசாயிகளுக்கு முழு பயன்தரும் வகையில் நடக்க, அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும் என்பதே விவசாயிகளின் விருப்பம்.

Source: 

No comments:

Post a Comment