Monday 15 December 2014

விவசாயிகள் வருகை குறைவால் நெகமம் விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் மீண்டும் ரத்து

பதிவு செய்த நேரம்:2014-12-13 10:38:10: பொள்ளாச்சி: பொள் ளாச்சி அடுத்த நெகமம் ஒருங்குமுறை விற்பனை கூடத்துக்கு, கொப்பரை கொண்டுவரும் விவசாயிகள் குறைவால், மீண்டும் கொப்பரை ஏலம் ரத்தா னது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். 
 பொள்ளாச்சியை அடுத்த நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத் தில், ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமையன்று கொப்பரை ஏலம் நடை பெறும். இங்கு நெகமம், காட்டம்பட்டி, ராசக்காபாளையம், சந்திராபுரம், சிறுகளந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரைகளை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்வார்கள். அதனை குறிப்பிட்ட விலை நிர்ணயித்து, வெளிமார்க்கெட் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
 ஆனால் நவம்பர் மாதம் துவக்கத்தில் இருந்து வியாழக்கிழமைகளில் நடந்த கொப்பரை ஏலத்தின்போது, விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரையின் அளவு மிகவும் குறைந்தது. கொப்பரை வரத்து இல்லாததையறிந்த ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள், கொப் பரை ஏலத்தை ரத்து செய்தனர். இப்படி 3வாரங்களாக தொடர்ந்து கொப் பரை ஏலம் ரத்தானது. பின் கடந்த மாதம் 27ம் தேதி விவசாயிகள் கொண்டுவந்த கொப்பரையின் அளவு ஓரளவு இருந்தால், அன்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வாரம் விவசாயிகள் யாரும் கொப்பரை கொண்டுவராததால் கொப்பரை ஏலம் மீண்டும் ரத்தானது. இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த ஏலத்தின்போதாவது விவசாயிகள் கொப் பரை கொண்டு வருவார் கள் என்று ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் மற்றும் வெளி மார்க்கெட் வியாபாரிகள் எதிர்பார்த்திருந்தனர். 
ஆனால் காலை முதல் மாலை வரை குறிப்பிட்ட ஓரிரு விவசாயிகளை தவிர வேறு யாரும் கொப்பரை கொண்டுவரவில்லை. இதனால் நேற்று முன்தினம் மீண்டும் கொப்பரை ஏலம் ரத்தானது. இதனால் கொப்பரை கொள்முதல் செய்ய வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Source: 

No comments:

Post a Comment