Monday 22 December 2014

விளைச்சலோ குறைவு... விலையோ அதிகம்... கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

23டிச
2014 
02:32
மேலுார் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வாங்க வெளிமாநில வியாபாரிகள் மேலுார் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இந்தாண்டு விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை அதிகரித்து, விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலுார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. 15 கரும்புகள் கொண்ட கட்டு, ஒரு மாட்டுவண்டிக்கு 20 கட்டுகளும், ஒரு லாரிக்கு 300 கட்டுகளும், டாரஸ் லாரிக்கு 450 கட்டுகளும் ஏற்றுகின்றனர். தற்போது ஒரு கட்டு கரும்பின் விலை ரூ.250க்கு விற்கப்படுகிறது. மேலுார் பகுதிகளில் செவல்மண்(சிவப்பு மண்) நிலம் என்பதால் சுவை அதிகம். அதனால் வெளிமாநில வியாபாரிகள் குவிய ஆரம்பித்துஉள்ளனர். இங்கு வெட்டப்படும் கரும்புகள் டெல்லி, ஆந்திரா, குஜராத், மும்பை, உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நாவினிப்பட்டி ராதாகிருஷ்ணன்: நிலத்தை உழுவது முதல் கரும்பு வெட்டுவது வரை டீசல், உரம், வேலை ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு என பல மடங்கு அதிகரித்து விட்டது. 10 மாத காலங்களில் ஏக்கருக்கு இரண்டு லட்சம் செலவு செய்து ரூ.80 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. இந்த ஆண்டு விளைச்சல் குறைவு என்பதால் விலை அதிகரித்துள்ளது. இது நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும். விவசாயத்தை ஊக்கப்படுத்துவதற்கு இடுபொருட்களை மானிய விலையில் அரசு கொடுக்க வேண்டும்.
வியாபாரி பாண்டி:- கரும்பின் தடிமன் மற்றும் விளைச்சலை பொருத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இங்கு விலைக்கு வாங்கப்படும் கரும்புகள் வெளிமாநிலங்களான குஜராத், மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ஏற்றப்படுகிறது. கடந்த ஆண்டை விட செலவுகள் அதிகம் என்பதால் லாபம் குறைவாக உள்ளது. 20 கட்டுகளை கொண்ட மாட்டு வண்டியின் விலை ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகிறது என்றார்.

Source: 

No comments:

Post a Comment