Tuesday 9 December 2014

மதுரையில் மானாவாரி சோளம் சாகுபடி அமோகம்! டி.கல்லுப்பட்டி விவசாயிகள் மகிழ்ச்சி

த நாள்

09டிச
2014 
00:46
டி.குண்ணத்துார் : மதுரை டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் மானாவாரியாக விதைக்கப்பட்ட சோளம் விளைச்சல் அமோகமாக உள்ளது.

மதுரையில் சில ஆண்டுகளாக மழையின்றி கடும் வறட்சி நிலவின. கண்மாய்கள் வறண்டன. தென்னை மரங்கள் கருகின. மானாவாரி நிலங்கள் வெடித்தன. ஏராளமான விவசாயிகள் பஞ்சம் பிழைக்க ஒடிசா, ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்தனர்.கை மேல் பலன்: வானம் பார்த்த பூமியில் மழையை நம்பிய விவசாயிகளுக்கு இந்தாண்டு பெய்த பருவமழை கை மேல் பலன் கொடுத்தது. மானாவாரி நிலமான டி.கல்லுப்பட்டி, புதுப்பட்டி, குண்ணத்துார் உள்ளிட்ட கரிசல்காட்டில் கடந்த செப்.,ல் சோளம், கம்பு விதைத்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் சோளம், கம்பு விளைச்சல் அமோகமாக உள்ளது.

கை கொடுத்த சோளம்: வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் 2 ஆயிரம் எக்டேர் நிலத்தில் 120 நாட்களில் விளையும் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இது நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. தை மாதத்தில் அறுவடை செய்யலாம். 350 எக்டேரில் கம்பு பயிரிடப்பட்டுஉள்ளது. மக்காச்சோளம் சிறிய அளவில் பயிரிடப்பட்டுள்ளது என்றார்.

Source: 

No comments:

Post a Comment